தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Palani Temple: பழனி முருகன் கோயிலில் கொட்டும் உண்டியல் காணிக்கை.. எவ்வளவு தெரியுமா?

Palani Temple: பழனி முருகன் கோயிலில் கொட்டும் உண்டியல் காணிக்கை.. எவ்வளவு தெரியுமா?

Apr 09, 2024 06:04 PM IST Karthikeyan S
Apr 09, 2024 06:04 PM IST
  • பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோயில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக கோயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ. 2 கோடியே 92 லட்சத்து 49,145 ரொக்கம் கிடைத்தது. மேலும் தங்கம் 811 கிராம், வெள்ளி 15 கிலோ 400 கிராம் வெளிநாட்டு கரன்சிகள் 503 காணிக்கையாக கிடைத்துள்ளன.
More