Coonoor Sims Park: 150வது ஆண்டு கொண்டாட்டம்! 5.5 டன் பழங்கள், 9 விதமான உருவங்களில் 64வது பழக் கண்காட்சி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coonoor Sims Park: 150வது ஆண்டு கொண்டாட்டம்! 5.5 டன் பழங்கள், 9 விதமான உருவங்களில் 64வது பழக் கண்காட்சி

Coonoor Sims Park: 150வது ஆண்டு கொண்டாட்டம்! 5.5 டன் பழங்கள், 9 விதமான உருவங்களில் 64வது பழக் கண்காட்சி

Published May 24, 2024 08:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published May 24, 2024 08:45 PM IST

  • நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருக்கும் சிம்ஸ் பூங்காவின் 150வது ஆண்டு மற்றும் 64வது பழக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அருணா தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி மே 26ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. Go Organic என்ற கருத்தை முன்வைத்து 5.5 டன் பழங்களில் சுமார் 9 வடிவங்களில் விலங்குகள், கலங்கரை விளக்கம் போன்றவை பழக் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவில் பழங்களால் வடிவமைக்கப்பட்டிருக்கும் உருவங்கள் சுற்றுலா பயணிகள், குறிப்பாக குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. இதேபோல், தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களின் அரங்குகளும் பழக் கண்காட்சியில் அமைக்கபட்டுள்ளன. அதன்படி கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், நாமக்கல், கரூர், மதுரை திருச்சி, பெரம்பலூர், கோவை மாவட்டங்களில் விளையக்கூடிய பழங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

More