Pamban Railway Bridge: பாம்பன் புதிய பாலத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்..விரைவில் ரயில் சேவை?
- பாம்பன் புதிய செங்குத்து ரயில் தூக்கு பாலத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றதையடுத்து, ரயில் என்ஜினை இயக்கி சோதனை செய்யப்பட்டது. இதனை ரயில்வே ஊழியர்கள் தேங்காய் உடைத்து, கேக் வெட்டி கொண்டாடினர். தண்டவாளங்கள் அமைத்த பின் முதல் முறையாக பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் வழியாக ரயில் எஞ்சினை இயக்கி ரயில்வே துறையினர் சோதனை மேற்கொண்டனர்.