தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Collision Between Bus And Lorry In Trichy-chennai National Highway

Trichy: செங்கல் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து; 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி - திருச்சியில் பயங்கரம்!

Apr 02, 2024 11:09 AM IST Karthikeyan S
Apr 02, 2024 11:09 AM IST
  • திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சஞ்சீவி நகர் அருகே முன்னால் சென்ற செங்கல் லாரியை ஆம்னி பேருந்து முந்த முயன்ற போது விபத்துக்குள்ளானது. இதில், ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு பெண் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து திருச்சி கோட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
More