Natham CCTV:'கையில வாங்குறேன் பையில போடுறேன்’: கல்லாவில் இருந்த பணத்தை திருடிய காவலர்கள்; குடிமகன்களிடம் மாமூல் வசூல்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Natham Cctv:'கையில வாங்குறேன் பையில போடுறேன்’: கல்லாவில் இருந்த பணத்தை திருடிய காவலர்கள்; குடிமகன்களிடம் மாமூல் வசூல்!

Natham CCTV:'கையில வாங்குறேன் பையில போடுறேன்’: கல்லாவில் இருந்த பணத்தை திருடிய காவலர்கள்; குடிமகன்களிடம் மாமூல் வசூல்!

Published Aug 03, 2024 02:04 PM IST Marimuthu M
Published Aug 03, 2024 02:04 PM IST

நத்தம்(திண்டுக்கல்): கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 65-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில் சில்லறை மற்றும் கள்ளச்சாராய தடுப்புப் பணிகளில் மதுவிலக்கு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், நத்தம் - செங்குறிச்சியில் ஆய்வுசெய்ய வந்த திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர் ஜேம்ஸ் ஆகியோர், சோதனை என்றபெயரில் முதியவர் ஒருவர் பையில் இருந்த ரூ.400 பணத்தை எடுத்துக்கொண்டனர். அதுமட்டுமல்லாது, பாரில் விற்பனை செய்து கல்லாவில் வைத்து இருந்த ரூ.40ஆயிரம் பணத்தை எடுத்து தன் வசப்படுத்திக்கொண்டனர். இதுகுறித்த சிசிடிவி வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

சட்டத்தை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினரே சட்டத்தை கையில் எடுத்து சட்ட விரோதமாக பணத்தை திருடிச்சென்ற சம்பவம் காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More