Coimbatore : பிளிறியபடி துருதுருவென சமத்தாக முகாமிற்கு சென்ற குட்டி யானை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coimbatore : பிளிறியபடி துருதுருவென சமத்தாக முகாமிற்கு சென்ற குட்டி யானை!

Coimbatore : பிளிறியபடி துருதுருவென சமத்தாக முகாமிற்கு சென்ற குட்டி யானை!

Jun 09, 2024 04:30 PM IST Pandeeswari Gurusamy
Jun 09, 2024 04:30 PM IST

  • Coimbatore: கோவை மாவட்டம், மருதமலை வனப் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு வனத் துறையினர் 5 நாட்கள் சிகிச்சை அளித்தனர். இதன் இடையே தாயுடன் இருந்த மூன்று மாத குட்டி யானையை வனத் துறையினர் பராமரித்து வந்த நிலையில் அந்த குட்டி யானை தாயை பிரிந்து அதன் கூட்டத்துடன் சென்றது. இதனை வனத் துறையினர் கண்காணித்து வந்த நிலையில் உடல் நலம் தேறிய தாய் யானை மீண்டும் அதே வனப் பகுதிக்குள் விடப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியார் தோட்டத்திற்குள் சுற்றி வந்தது. இதை தொடர்ந்து அங்கு சென்ற வனத் துறையினர் குட்டி யானையை தாய் யானை இருக்கும் மருதமலை வனப் பகுதி யானை மடவு, அட்டுக்கல் வனப் பகுதிக்கு கொண்டு வந்தனர். குட்டி யானையை தாயுடன் சேர்க்க பல கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது அதே வேலையில் மற்றொரு கூட்டத்தில் இருக்கும் பெண் யானையும் சேர்க்கவில்லை நேற்று இரண்டு முறை முயற்சி செய்தும் தாய் யானை குட்டியை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் குட்டி யானை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்ததை அடுத்து, இன்று அதிகாலை யானைக் குட்டி சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்காக முதுமலை யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. கடந்த 10 நாட்களாக தாயுடன் குட்டியை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட வனத் துறைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது இருந்த போதிலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட தாய் யானை தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது உள்ளது அதே நேரத்தில் குட்டியையும் முகாமுக்கு கொண்டு சென்று நன்றாக பராமரிக்க முடியும் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

More