தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coimbatore: தண்டு மாரியம்மன் கோயிலில் தீச்சட்டி திருவிழா

Coimbatore: தண்டு மாரியம்மன் கோயிலில் தீச்சட்டி திருவிழா

Apr 24, 2024 04:37 PM IST Pandeeswari Gurusamy
Apr 24, 2024 04:37 PM IST

கோவை - அவிநாசி சாலை உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 16 - ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று இதைத் தொடர்ந்து இன்று நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வு துவங்கியது. இதில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தியும் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் ஊர்வலமாக செல்கின்றனர். கோனியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக டவுன் ஹால், ஒப்பனைக்கார வீதி, லிங்கப்பசெட்டி வீதி,பால் மார்கெட், புரூக் பாண்டு ரோடு, நஞ்சப்பா ரோடு வழியாக தண்டு மாரியம்மன் கோவில் வந்து அடைந்தது.

More