தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Thoothukudi: ரத வீதிகளில் கம்பீரமாக வலம் வந்த சுவாமி, அம்பாள்.. சித்திரை திருவிழா கோலாகலம்!

Thoothukudi: ரத வீதிகளில் கம்பீரமாக வலம் வந்த சுவாமி, அம்பாள்.. சித்திரை திருவிழா கோலாகலம்!

Apr 23, 2024 06:33 PM IST Karthikeyan S
Apr 23, 2024 06:33 PM IST
  • தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் (சிவன்) கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 10ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் இணை தேரில் கணபதி, முருகப்பெருமான், பெரிய தேரில் சுவாமி சங்கர ராமேஸ்வரர், பாகம்பிரியாள் அம்பாள் வலம் வந்தனர். தேர்களின் முன் ஆழி ஆட்டம், ராஜ மேளம், சிவனடியார்களின் கைலாய வாத்தியம், மயிலாட்டம், கோலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
More