China Mysterious Disease: சீனாவில் விநோத நோய் பாதிப்பால் மருத்துவமனை குவியும் மக்கள்! இந்தியாவில் அலர்ட்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  China Mysterious Disease: சீனாவில் விநோத நோய் பாதிப்பால் மருத்துவமனை குவியும் மக்கள்! இந்தியாவில் அலர்ட்

China Mysterious Disease: சீனாவில் விநோத நோய் பாதிப்பால் மருத்துவமனை குவியும் மக்கள்! இந்தியாவில் அலர்ட்

Published Nov 26, 2023 11:18 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Nov 26, 2023 11:18 PM IST

  • அண்டை நாடான சீனாவில் அதிகரித்து வரும் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு காரணமாக, மத்திய அரசு சார்பில் மாநில அரசுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த நிமோனியா காய்ச்சல் பாதிப்பு குழந்தைகளிடையே அதிகமாக இருந்து வருகிறது. பெய்ஜிங் நகரில் அமைந்திருக்கும் குழந்தைகள் மருத்துவமனையில் சுமார் 7 ஆயிரம் குழந்தைகள் வரை காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு சுவாச பிரச்னை இருந்து வருகிறது. சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வருகின்றன. இதனால் இந்த நோய் பாதிப்பு குறித்த தரவுகளை சேகரித்து சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநில அரசாங்கத்திடம் மருத்துவ தயார்நிலையை உடனடியாக மதிப்பாய்வு செய்ய கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் தற்போது எவ்வித பீதியும் அடைய வேண்டாம் என தெரிவித்துள்ளது.

More