Burkha man Attacked: பெண்ணை பார்க்க புர்கா அணிந்து கத்தியை மறைத்து வைத்து வந்த நபர்..தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
- கர்நாடக மாநிலம் சிக்மங்களுரு நகரில் இளைஞர் ஒருவர் முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா அணிந்து வந்துள்ளார். பலேஹொன்னூர் பகுதியை சேர்ந்த அந்த நபரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, பெண் ஒருவரை பார்ப்பதற்காக புர்கா அணிந்து வந்திருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர் புர்காவில் கத்தியை மறைத்து வைத்திருப்பது தெரிந்த நிலையில், அந்த பகுதியினர் இளைஞரை தாக்கி போலீசிடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.