தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kandadevi Temple: கண்டதேவி கோயில் தேரோட்டம் - ஏ.டி.ஜி.பி தலைமையில் ஆலோசனை

Kandadevi Temple: கண்டதேவி கோயில் தேரோட்டம் - ஏ.டி.ஜி.பி தலைமையில் ஆலோசனை

Jun 19, 2024 11:22 PM IST Karthikeyan S
Jun 19, 2024 11:22 PM IST
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி கோயில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக சிவகங்கை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் ஆட்சியர் ஆஷா அஜித், ஏ.டி.ஜி.பி அருண் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் டி.ஐ.ஜி கண்ணன், ஐ.ஜி துரை, மதுரை மாவட்ட எஸ்.பி அரவிந்த், சிவகங்கை எஸ்.பி டோங்க்ரே உமேஷ் பிரவின் மற்றும் வருவாய்த்துறையினர், அறநிலையத் துறையினர், தேவஸ்தானம் தரப்பினர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தேரோட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. தேரோட்ட நாளன்று 2,800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் 16 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
More