Mayana Kollai festival: திடீரென சரிந்து விழுந்த 60 அடி தேர்..திருவிழாவில் அதிர்ச்சி!
- வேலூர் பாலாற்றங்கரையில் நடைபெற்ற மயானக்கொள்ளை திருவிழாவின்போது 60 அடி உயரம் கொண்ட தேர் திடீரென சரிந்து கீழே விழுந்தது. இதில் தொழிலாளி ஒருவர் சிக்கி படுகாயமடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வேலூர் வடக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.