Chandrayaan 3 Vikram Lander Seperation: விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேறிய விக்ரம் லேண்டர் - இஸ்ரோ தகவல்
- இஸ்ரோவின் நிலவுக்கான பயணத்தில் சந்திரயான 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் விக்ரம் வெளியேறியுள்ளது. இதன் விடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் பயணத்தில் இது மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ பகுதியில் இருந்து ஆகஸ்ட் 23 மென்மையான தரையிறக்கத்தை மேற்கொள்ளவுள்ளது. தற்போது இந்த லேண்டர் நாளை மாலை 4 மணியளவில் deboosting செய்ய (இயக்கத்தை மெதுவாக்க) சற்று குறைந்த சுற்றுப்பாதையில் இறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான் 3 நிலவின் சுற்றுப்பாதையை அடைந்திருந்திருக்கும் நிலையில் இந்தியா சார்பில் மூன்று செயற்கைகோள்கள் நிலவை சுற்றி உள்ளது என இஸ்ரோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய பின்னர் உலக அளவில் இதை செய்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்திய பெறவுள்ளது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இதை செய்துள்ளது.