Chandrayaan 3: தானாக சுயபரிசோதனை செய்த விக்ரம் லேண்டர் - ஆச்சர்ய கடலில் இஸ்ரோ விஞ்ஞானிகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Chandrayaan 3: தானாக சுயபரிசோதனை செய்த விக்ரம் லேண்டர் - ஆச்சர்ய கடலில் இஸ்ரோ விஞ்ஞானிகள்

Chandrayaan 3: தானாக சுயபரிசோதனை செய்த விக்ரம் லேண்டர் - ஆச்சர்ய கடலில் இஸ்ரோ விஞ்ஞானிகள்

Oct 03, 2023 11:43 PM IST Muthu Vinayagam Kosalairaman
Oct 03, 2023 11:43 PM IST

  • சந்திரயான்-3 அதன் அனைத்து பணி மற்றும் நோக்கங்களையும் நிறைவு செய்துள்ளது. இருப்பினும் விக்ரம் லேண்டர் செய்திருக்கும் ஒரு விஷயம் இஸ்ரோ விஞ்ஞானிகளை ஆச்சர்யபடுத்தியுள்ளது. விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக ஒரு ஹாப் பரிசோதனையை நடத்தியுள்ளது. அதாவது முதலில் திட்டமிடப்படாத கட்டளைப்படி மீண்டும் நிலவில் தரையிறங்கியது. இது எதிர்கால நிலவு பயணங்களுக்கான புதிய சாத்தியங்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நிலவுக்கு அனுப்பப்படும் விண்கலங்கள் சந்திர மாதிரிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் திரும்புவதையும் சாத்தியமாக்கியுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து தரையிறங்கிய விக்ரம் லேண்டர் பல்வேறு கட்ட பரிசோதனைகளை நிலவில் மேற்கொண்டது. விக்ரம் லேண்டர் தானாகவே கட்டளையிட்டு அது தரையிறங்கிய சிவ சக்தி புள்ளியில் இருந்து மேல் ஏறி பின்னர் 40 செமீ தூரத்தில் வேறொரு புள்ளியில் தானாகவே தரையிறங்கியுள்ளது. இந்த ஹாப் பரிசோதனையானது நிலவுக்கான பயணத்தில் திட்டமிடப்படவில்லை என சந்திரயான் 3 இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். தற்போது விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகிய இரண்டும் பதில் அளிக்காமல் இருந்து வருகிறத

More