Coimbatore: கோவை மாநகராட்சி மேயர் தேர்தல்! மாமன்ற கூட்ட அரங்கில் கவுன்சிலர்களுக்கு செல்போன் தடை
- கோவை மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்ப மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்துக்கு வந்த கவுன்சிலர்களுக்கு செல்போன் தடை விதிக்கப்பட்டு போலீசாரின் முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.