Paris Protest: டீன்ஏஜ் சிறுவனை சுட்டு கொன்ற போலீஸ்? பாரிஸ் நகரில் வெடித்த வன்முறை - விடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Paris Protest: டீன்ஏஜ் சிறுவனை சுட்டு கொன்ற போலீஸ்? பாரிஸ் நகரில் வெடித்த வன்முறை - விடியோ

Paris Protest: டீன்ஏஜ் சிறுவனை சுட்டு கொன்ற போலீஸ்? பாரிஸ் நகரில் வெடித்த வன்முறை - விடியோ

Jun 29, 2023 03:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 29, 2023 03:00 PM IST

  • டிராபிக் காவலர் நிறுத்த சொல்லியும் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற 17 வயது சிறுவனை, போலீஸ் சுட்டத்தில் உயிரிழந்த சம்பவத்தை எதிர்த்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போராட்டம் வெடித்துள்ளது. காரில் இருக்கும் சிறுவனை போலீஸ் துப்பாக்கியால் சுடும் விடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு பாரிஸ் பகுதியில் சாலையில் நின்றிருந்த கார்கள் போராட்டகாரர்களால் தீ வைக்கப்பட்டதுடன் பேருந்து நிலையங்களை நாசப்படுத்தினர். இதனால் ஏற்பட்ட வன்முறையை தடுக்க முயன்ற போலீசார் மீது போராட்டகாரர்கள் பட்டாசுகளை வெடிக்க செய்து வீசினர். இதன்பின்னர் கண்ணீர் புகை, சிதறல் கையெறி குண்டுகளை பயன்படுத்தி போலீசார் போராட்டகாரர்களை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். டீன்ஏஜ் சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இருநாள்களுக்கு முன்பு பாரிஸ் புறநகர் பகுதியில் டீன்ஏஜ் சிறுவன் ஒருவர் வாகனத்தை ஒட்டி வந்துள்ளார். அவரது வாகனத்தை நிறுத்த போலீசார் வெளியே இழுக்க முயற்சித்தபோது அவர் தப்பிக்க முயற்சித்துள்ளார். அப்போது போலீஸ் ஒருவர் தனது கையில் துப்பாக்கி வைத்திருந்தார். சில மீட்டர் தூரம் சென்று கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த சிறுவன் உயிரிழ்ந்தார். உடனடியாக அவசர சேவை வரவழைக்கப்பட்ட பின்னரும் சிறுவன் உயிரை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் போலீஸ்தான் துப்பாக்கியால் அந்த சிறுவனை சுட்டு கொலை செய்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் கொலை குற்றம் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.

More