Tamil News  /  Video Gallery  /  Car Rams Into Barriers Near Israeli Embassy In Tokyo; One Arrested After Big Security Scare

Israel Embassy: டோக்கியோவில் இஸ்ரேல் தூதரகம் அருகே கார் விபத்தை ஏற்படுத்திய நபர் கைது - போலீஸ் விசாரணை

Nov 16, 2023 09:54 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 16, 2023 09:54 PM IST
  • ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் நுழைவுவாயில் அருகே கார் விபத்து நிகழ்ந்துள்ளது. வலது சாரி அமைப்பை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் இந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இந்த கார் விபத்து தாக்குதல் தூதரகத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஜப்பான் தலைநகர் பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் போலீசார் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் படையினர் நிகழ்த்தி வரும் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்த சம்பவம் அரங்கேறியிருக்ககூடும் என கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இஸ்ரேல் தாக்தலுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
More