தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ஆந்திராவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து: திண்டுக்கல்லை சேர்ந்த 4 பேர் பலி

ஆந்திராவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து: திண்டுக்கல்லை சேர்ந்த 4 பேர் பலி

May 27, 2024 07:51 PM IST Karthikeyan S
May 27, 2024 07:51 PM IST
  • ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் பாப்புலபாடு தேசிய நெடுஞ்சாலையில் இன்று (மே 27) காலை லாரி மீது அதிவேகத்தில் வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த 4 பேரும் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் நல்லம்மநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சத்யா என்ற பெண் விஜயவாடா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
More