தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Accident: பூம்பூம் மாடு மோதி வேன் அருகே தூக்கி வீசப்பட்ட நபர்! நூலிலையில் உயர் தப்பிய சம்பவம் - சிசிடிவி காட்சி

Accident: பூம்பூம் மாடு மோதி வேன் அருகே தூக்கி வீசப்பட்ட நபர்! நூலிலையில் உயர் தப்பிய சம்பவம் - சிசிடிவி காட்சி

Apr 07, 2024 09:02 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 07, 2024 09:02 PM IST
  • பெங்களுருவில் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் மீது திடீரென பூம்பூம் மாடு மோதி முட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரு மகாலட்சுமி லேஅவுட் நீச்சல் குளம் சந்திப்பு பகுதி அருகில் பெண் ஒருவர் பூம்பூம் மாடு ஒன்றை அழைத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென மிரண்டு ஓடி முயன்ற அந்த மாடு சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார், எதிர்திசையில் சென்ற வேன் அருகே கீழே விழுந்தார். இதைக்கண்ட வேன் ஓட்டுநர் உடனடியாக பிரேக் அடிக்க, இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்த அந்த நபர் நூலிலையில் உயிர் தப்பினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More