தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Bomb Threat To Palani Railway Station

Bomb Threat: பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Mar 23, 2024 04:15 PM IST Karthikeyan S
Mar 23, 2024 04:15 PM IST
  • திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் பேருந்து மற்றும் வாகனங்கள் மற்றும் ரயிலில் பழனி முருகனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள். இந்த நிலையில், பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 50க்கும் மேற்பட்ட போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மோப்பநாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More