Vanathi Srinivasan: "4 பேரை என்கவுண்டரில் போட்டால்"... வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி
- கோவை மாவட்டம், புலியகுளம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாஜக மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கும் அட்டையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வானதி கூறுகையில், "தமிழக அமைச்சரவையில் மாற்றம் அமைச்சர்களுக்கு இருக்கலாம். ஆனால் ஏமாற்றம் பொதுமக்களுக்கு தான் இருக்கும். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. என்கவுண்டர் செய்தால் பொதுமக்களை சமாதானம் செய்ய முடியும் என்று திமுக அரசாங்கம் நினைக்கிறது." என்றார்.