பாஜக - போலீஸ் இடையே தள்ளுமுள்ளு.. விரட்டி விரட்டி பிடித்து கைது செய்த சம்பவம்!
- தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தாமிரபரணி ஆற்று பாலமானது கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது சேதமடைந்து தற்போது ஒரு வருடம் ஆகிறது. இதனை கண்டித்து பாஜகவினர் இன்று தாமிரபரணி ஆற்று பாலத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றனர். அப்போது பாஜகவினருக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அஞ்சலி செலுத்த வந்த பாஜகவினரை போலீசார் விரட்டி விரட்டி பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.