Kodaikanal: வீட்டிற்குள் புகுந்து காட்டெருமை அட்டகாசம்... பொதுமக்கள் பீதி!
- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாம்பார்புரம் புனித சலேத் அன்னை ஆலயம் அருகே குடியிருப்புகள் அமைந்துள்ளது . இந்த பகுதியில் நேற்று இரவு ஒற்றை காட்டெருமை ஒன்று புகுந்துள்ளது . அங்கு அமைந்துள்ள குடியிருப்பின் மேல் கூரையின் மீது ஓடிய காட்டெருமை மேற்கூரையை உடைத்து வீட்டிற்குள் புகுந்தது .இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கூச்சலிட்டனர். வீட்டில் புகுந்த காட்டெருமை வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி உள்ளது . வீட்டில் புகுந்த காட்டெருமை வீட்டை விட்டு வெளியேறி ஓடியுள்ளது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர் . இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். குடியிருப்பு மற்றும் நகர் பகுதிக்குள் புகும் காட்டெருமைக் கூட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.