West Bengal Violence: பஞ்சாயத்து தேர்தலில் வெடித்த வன்முறை - அரசியல் கட்சி பிரமுகர்கள் 10 பேர் படுகொலை
- மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் வெடித்த வன்முறையில் 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இறந்தபோனவர்களில் 7 பேர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாகவும், பாஜக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் பலியாகியுள்ளனர். இந்த வன்முறைக்கு காரணமாக பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் ஒருவரையொருவர் புகார் தெரிவித்து வருகின்றனர். மூர்ஷிதபாத் ரெஜிநகர் பகுதியில் நிகழ்ந்த இந்த வன்முறையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இந்த வன்முறை காரணமாக மத்திய படைகள் கலவரம் வெடித்த பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டிருப்பதாக மேற்கு வங்க அமைச்சர் ஷாஷி பாஞ்சா தெரிவித்துள்ளார். வன்முறைக்கு இடையே இரண்டு வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.