தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vattalagundu: வங்கியில் ஊழியர்களை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி.. வத்தலகுண்டுவில் பரபரப்பு

Vattalagundu: வங்கியில் ஊழியர்களை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி.. வத்தலகுண்டுவில் பரபரப்பு

Apr 08, 2024 05:48 PM IST Karthikeyan S
Apr 08, 2024 05:48 PM IST
  • திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில், பட்டப் பகலில் ஊழியர்களை கட்டிப்போட்டு வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இரவே கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்ததும் அந்த முயற்சி பயனளிக்காமல் ஊழியர்கள் வரும் வரை காத்திருந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது . பெரும் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் வங்கியில் இருந்த சுமார் ரூபாய் 4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணம் தப்பியது. இச்சம்பவத்தால் வத்தலக்குண்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More