Ram Temple Inaugration: இறுதிகட்டத்தை எட்டிய ராமர் கோயில் கட்டுமானம் - திறப்பு விழா எப்போது? வெளியான தகவல்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ram Temple Inaugration: இறுதிகட்டத்தை எட்டிய ராமர் கோயில் கட்டுமானம் - திறப்பு விழா எப்போது? வெளியான தகவல்

Ram Temple Inaugration: இறுதிகட்டத்தை எட்டிய ராமர் கோயில் கட்டுமானம் - திறப்பு விழா எப்போது? வெளியான தகவல்

Jun 21, 2023 07:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 21, 2023 07:15 PM IST

  • உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் மிக பிரமாண்டமான ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி இந்த நிகழ்வில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. இன்னும் 10 நாள்களில் இந்த சடங்குகள் தொடங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது. மிக பிரமாண்டமாக இந்த கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் வசித்து வரும் இந்துக்களின் நூற்றாண்டுகால கனவாக இருந்து வரும் ராமர் கோயில் திறப்பு இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. 2024 மகர சங்கராந்தி நாளை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திறப்பு விழா நிகழ்வை உலகம் முழுவதும் நேரலையாக காணும்விதமாக ஏற்படும் செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்குள் மூன்று மாடி கட்டிங்கள் கொண்ட ராமர் கோயிலின் தரைத்தளம் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கருவறையின் கதவுகள் தங்கம் பதிக்கப்படவுள்ளது. கோயிலின் மூன்று கேட்கள், கோபுரங்களும் தங்க முலாம் பூசப்படவுள்ளது. நாக்ரா ல்டைலில் இந்த கோயிலின் கட்டுமானம் அமையவுள்ளது. ஒன்பது ஏக்கர் வளாகத்தில் மூன்று ஏக்கர் அளவில் கோயில் கட்டுமானம் இடம்பிடித்துள்ளது. ராமாயணம் கதையை பிரதிபலிக்கும் விதமாக கோயில் சுவற்றில் சிற்பங்கள் பதிக்கப்படுகின்றன. கோயில் வளாகத்தில் 5 மண்டபங்கள் இடம்பெறவுள்ளன. கட்டுமான பணிகள் முடிவுற்றவுடன் தரைத்தளம் ராமர் கதைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 4 லட்சம் க்யூபிக் அடி கற்கள் மற்றும் மார்பிள்கள் போன்றவை ராஜஸ்தானில் இருந்த கட்டுமானத்துக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்டீல்கள் மற்றும் கற்கள் ஆகியவை இதில் பயன்படுத்தப்படவில்லை. கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கான மையம் உள்பட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. ராம் ஜென்மபூமி கோயில் பகுதியானது மொத்தம் 70 ஏக்கர் நிலத்தில் பறந்து விரிந்துள்ளது. அடுத்த ஆண்டு பொதுதேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இந்த கோயில் மக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More