Assam: ரூ. 2 கோடி மதிப்பில் 10 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் - போலீஸ் தீவிர விசாரணை
- அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் போதை மருந்து வியாபாரியிடம் யபா என்று அழைக்கப்படும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த போதை மாத்திரைகள் மெத்தம்பேட்டமைன் என்ற போதை பொருளால் தயாரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அசாம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போதை மாத்திரை விரைவான இதயத் துடிப்பு, ரத்த அழுத்தமத்தை அதிகரிக்க செய்வது, மூளையில் உள்ள சிறிய ரத்த நாளங்களில் சேதம் ஏற்படுத்தி பக்கவாதத்துக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.