Tulip Flowers: ஸ்ரீநகரில் ஆசியாவின் மிகப் பெரிய துலிப் தோட்டம் திறப்பு! பூத்துக்குலுங்கும் 17 லட்சம் துலிப் மலர்கள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tulip Flowers: ஸ்ரீநகரில் ஆசியாவின் மிகப் பெரிய துலிப் தோட்டம் திறப்பு! பூத்துக்குலுங்கும் 17 லட்சம் துலிப் மலர்கள்

Tulip Flowers: ஸ்ரீநகரில் ஆசியாவின் மிகப் பெரிய துலிப் தோட்டம் திறப்பு! பூத்துக்குலுங்கும் 17 லட்சம் துலிப் மலர்கள்

Mar 23, 2024 08:25 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 23, 2024 08:25 PM IST

  • ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்கள் தோட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் திறக்கப்பட்டது. தால் ஏரி மற்றும் ஜபர்வான் மலைகளுக்கு இடையில் இந்த துலிப் மலர்கள் தோட்டம் அமைந்துள்ளது. பல்வேறு வண்ணமயமான துலிப் மலர்கள் இங்கு பூத்துக்குலுங்க தொடங்கியிருப்பதாக மலர் வளர்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிராஜ் பாக் என்றும் இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் எனவும் இது அழைக்கப்படுகிறது. கோடை விடுமுறைக்கும் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த தோட்டத்தில் பல வகையான துலிப் மலர்கள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More