தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Aiadmk: கவனம் ஈர்க்கதான் அண்ணாமலை எல்லாமே பண்றாரு - சிங்கை ராமச்சந்திரன்!

AIADMK: கவனம் ஈர்க்கதான் அண்ணாமலை எல்லாமே பண்றாரு - சிங்கை ராமச்சந்திரன்!

Apr 17, 2024 02:42 PM IST Pandeeswari Gurusamy
Apr 17, 2024 02:42 PM IST

நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், நூற்றுக்கு 200 சதவீதம் கோவை நாடளுமன்ற தொகுதியில் அண்ணா திமுக வெற்றி பெறும். அண்ணாமலை ஒவ்வொன்றையும் கவன ஈர்ப்புக்காக செய்து வருகிறார். பத்திரிகையாளர்களை அவதூறாக பேசுகிறார். அது அவரின் தனிப்பட்ட விவகாரம். கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் திமுக அரசின் மின்கட்டண உயர்வால் சிறு குறு தொழில்கள் நசிவடைந்துள்ளன. விசைத்தறிகள் பழைய இரும்புக்கு விற்கப்பட்டு வருகின்றன. திமுக அரசு கடந்த 3 ஆண்டுகளில் சிறு குறு தொழில்களின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக நூல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட விவகாரங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் பாஜகவும், திமுகவும் இதுவரை எதுவும் செய்யாமல் தேர்தல் வந்தவுடன் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தொழில்கள் அனைத்தும் அழிந்த பிறகு வாக்குறுதிகள் கொடுத்து என்ன பிரயோஜனம். இதற்கெல்லாம் அண்ணாமலையும் கணபதி ராஜ்குமாரும் பதில் சொல்வார்களா? எடப்பாடி பழனிசாமியின் நிழலாக இருந்து செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் வேலுமணி கொங்கு மண்டலம் முழுவதும், நான்கைந்து நாடாளுமன்ற தொகுதிகளை கவனிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இருப்பதால் அது பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

More