NIT Protest in Srinagar: இஸ்லாம் மதகடவுள் குறித்து அவதூறு பதிவு! காஷ்மீர் கல்வி நிலையங்களில் வெடித்த போராட்டம்
- சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சர்ச்சை பதிவு காரணமாக ஜம்மு காஷ்மீர் கல்வி நிலையஹ்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் ஸ்ரீநகரில், என்ஐடி என்று அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இஸ்லாம் மதத்தில் கடவுளாக பாவிக்கப்படும் முகமது பற்றி அவதூறு பதிவை பகிர்ந்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், என்ஐடி வளாகத்தில் போராட்டமாக வெடித்தது. இதன் பின்னர் இந்த செய்தி மற்ற கல்வி நிறுவனங்களிலும் பரவிய நிலையில் பெரும் போராட்டமாக மாறியது. இதற்கிடையே அவதூற பதிவை பகிர்ந்த மாணவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த மாணவர் மும்பையை சேர்ந்தவர் என்பதும் தற்போது விடுமுறைக்கு சொந்த மாநிலம் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அல்லாஹ் ஹூ அக்பர் என்ற கோஷங்களை முழக்கமிட்டனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக வகுப்புகள், தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த விவகாரத்தில் சமூக வலைத்தள பதிவை பகிர்ந்த மாணவர் மீது என்ஐடி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் உமர் பரூக் இந்த விவகாரம் தொடர்பாக தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.