Andra Flood: ஆற்றுபாலத்தை கடந்து கரைபுரண்டோடும் வெள்ளம்! ஆபத்தான நிலையில் கையில் குழந்தையுடன் கடக்கும் மக்கள்
- ஆந்திர மாநிலம் வடகிழக்கு கடலோர பகுதியாக இருந்து வரும் அல்லூரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பிஞ்சர்லா மலை அருகே அமைந்திருக்கும் பாலிந்தா என்ற பழங்குடி கிராமத்துக்கு செல்ல ஒரேயொரு வழிதான் உள்ளது. மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கிருந்த ஆற்று பாலத்தை மழை நீர் வேகமாக கடந்த சென்றது. இதில் காக்கிநாடா மாவட்டத்தின் எல்லேஷ்வரம் மருத்துவமனையில் குழந்தை பெற்றேடுத்த தாய், தனது குழந்தை மற்றும் அவரது குடும்படுத்தினர் ஆபத்தான நிலையில் வெள்ளம் கரைப்புரண்டோடும் ஆற்று பாலத்தை கடந்து சென்ற விடியோ காட்சி வெளியாகியுள்ளது. காண்போரை பதைபதைக்க வைக்கும் விதமாக இந்த விடியோ அமைந்திருப்பதோடு, பொதுமக்கள் பாதுகாப்புக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.