தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tiruvannamalai: அண்ணாமலையார் கோயிலில் அக்னி தோஷ நிவர்த்தி பூஜை!

Tiruvannamalai: அண்ணாமலையார் கோயிலில் அக்னி தோஷ நிவர்த்தி பூஜை!

May 26, 2024 08:54 PM IST Karthikeyan S
May 26, 2024 08:54 PM IST
  • திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகின்ற நாட்களில் கருவறையில் இருக்கும் மூலவர் அண்ணாமலையாரின் சிரசின் மேல் தாரா பாத்திரம் வைத்து குளிர்விக்கும் வகையில் உச்சி கால முதல் சாய்ரச்சை வரை தாரா பாத்திரத்தில் பண்ணீரை மற்றும் வாசனை திரவியங்களை ஊற்றி அண்ணாமலையாரை குளிர வைப்பது வழக்கம். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் முடிந்து நாளை அக்னி நிவர்த்தி பூஜையில் 1008 கலசாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் இன்று காலை கணபதி ஹோமத்துடன் அக்னி நிவர்த்தி பூஜை தொடங்கியது. இந்நிலையில் விடுமுறை தினமான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தார்கள். அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி மகாதேவன் விநாயகர் , அண்ணாமலையார் உண்ணாமலைஅம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் . வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு அண்ணாமலையார் ஆலயத்தின் சார்பாக நீர்மோர் தண்ணீர் , பிஸ்கட் பாக்கெட், லட்டு, உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
More