Mathura Train Accident: மதுபோதை ரயில்வே ஊழியரால் விபத்து ஏற்பட்டிருப்பதாக அறிக்கை - வெளியான சிசிடிவி காட்சி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Mathura Train Accident: மதுபோதை ரயில்வே ஊழியரால் விபத்து ஏற்பட்டிருப்பதாக அறிக்கை - வெளியான சிசிடிவி காட்சி

Mathura Train Accident: மதுபோதை ரயில்வே ஊழியரால் விபத்து ஏற்பட்டிருப்பதாக அறிக்கை - வெளியான சிசிடிவி காட்சி

Sep 29, 2023 08:53 PM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 29, 2023 08:53 PM IST

  • மதுரா ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாவது பிளார்பார்ம் மீது ரயில் எஞ்சின் ஏறி நின்ற விவகாரத்தில் ரயில்வே ஊழியர் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. ரயிலை இயக்கும்போது அவர்கள் மதுபோதையில் இருந்திருப்பதும், ரயிலை இயக்கிய சச்சின் என்பவர் போனில் பிஸியாக யாரிடமோ பேசிக்கொண்ட தனது பையை ரயில் த்ரோட்டில் மீது வைத்ததன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருக்க எலெக்ட்ரிக் ரயில் எஞ்சின் ஒன்று பிளாட்பார்ம் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழப்புகளம் ஏற்படவில்லை. பெண் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பிளாட்பார்மின் பகுதிகள், எலெக்ட்ரிக் கம்பத்தில் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சச்சின் என்ற ஊழியரே விபத்து ஏற்பட காரணம் என்று தெரியவந்துள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன்னர் பேக் ஒன்றை எடுத்தவாறு உள்ளே வரும் சச்சின் தனது போனை பார்த்தபடி இருந்துள்ளார். அப்போது அவர் தனது பேக்கை ரயில் த்ரோட்டில் மீது வைக்க எதிர்பாராத விதமாக ரயில் வேகமாக இயங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயில் எஞ்ஜினில் ஏறிய சச்சின் மதுபோதையில் இருந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் சச்சின், ரயிலின் லோகோ பைலட் எஞ்சின் இயக்கத்தை ஆன் செய்து வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த லோகோ பைலட் சாவி ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார். சச்சின் உள்பட 5 பேர் இந்த விபத்து தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான ரயில் டெல்லியில் இருந்து புறப்பட்டு மதுரா வந்தடைந்துள்ளது.

More