தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Aiadmk: முன்னாள் அமைச்சர் முன்பு சரமாரியாக அடித்துக்கொண்ட அதிமுகவினர் - என்ன காரணம்?

AIADMK: முன்னாள் அமைச்சர் முன்பு சரமாரியாக அடித்துக்கொண்ட அதிமுகவினர் - என்ன காரணம்?

May 01, 2024 04:29 PM IST Karthikeyan S
May 01, 2024 04:29 PM IST
  • பழனியில் அதிமுக சார்பில் பட்டத்து விநாயகர் கோவில் அருகே நீர் பந்தல் திறக்கும் விழா அக்கட்சியின் துணை பொது செயலாளரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நத்தம் விஸ்வநாதன் தனது காரில் கிளம்பிய போது அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரவி மனோகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் காரை முற்றுகையிட்டு ஒருவரை ஒருவர் குறை கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் தகாத வார்த்தைகளை கூறிக்கொண்டு மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்து நத்தம் விஸ்வநாதன் தனது காரில் கிளம்பிச் சென்றார். பழனி அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் குறித்து தவறான தகவலை அதிமுக பிரமுகர் ஒருவரே தனது நண்பர் மூலம் சமூக வலைதளங்களில் பரப்பியதால் இக் குழப்பம் ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
More