AIADMK: தேர்தல் ஆணையத்தில் அதிமுக பரபரப்பு புகார்..என்னென்ன விவகாரம் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Aiadmk: தேர்தல் ஆணையத்தில் அதிமுக பரபரப்பு புகார்..என்னென்ன விவகாரம் தெரியுமா?

AIADMK: தேர்தல் ஆணையத்தில் அதிமுக பரபரப்பு புகார்..என்னென்ன விவகாரம் தெரியுமா?

Published Mar 18, 2024 07:09 PM IST Karthikeyan S
Published Mar 18, 2024 07:09 PM IST

  • சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவை நேரில் சந்தித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை புகார் மனு ஒன்றை அளித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில், "தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அதனடிப்படையில், ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பது தேர்தல் நடத்தை விதிமுறையில் உள்ளது. இந்தநிலையில், அதிமுக - பாஜக இடையே திரைமறைவில் ஒப்பந்தம் நடக்கிறது என்று தனியார் செய்தி நாளிதழ் வெளியிட்டுள்ள அவதூறு செய்தி கண்டிக்கத்தக்கது. உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

More