Adani Defence: அதானி நிறுவனத்தால் தயார் செய்யப்பட்ட த்ரிஷ்டி 10 ஆளில்லா விமானம்! பாதுகாப்பு துறைக்கு கிடைத்த ஊக்கம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Adani Defence: அதானி நிறுவனத்தால் தயார் செய்யப்பட்ட த்ரிஷ்டி 10 ஆளில்லா விமானம்! பாதுகாப்பு துறைக்கு கிடைத்த ஊக்கம்

Adani Defence: அதானி நிறுவனத்தால் தயார் செய்யப்பட்ட த்ரிஷ்டி 10 ஆளில்லா விமானம்! பாதுகாப்பு துறைக்கு கிடைத்த ஊக்கம்

Jan 11, 2024 11:04 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 11, 2024 11:04 PM IST

  • இந்திய கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர். ஹரி குமார், ஹைதராபாத்தில் உள்ள அதானி ஏரோஸ்பேஸ் பூங்காவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட த்ரிஷ்டி 10 ஸ்டார்லைனர் ஆளில்லா விமானத்தை வெளியிட்டார். அதானி டிஃபென்ஸ் மற்றும் இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் இணைந்து தயாரித்த ட்ரோன், மேம்படுத்தப்பட்ட உளவுத்துறை, கண்காணிப்பு, உளவுத்துறை விமானமாக உள்ளது. 36 மணிநேர தாங்கும் ஆற்றல், 450 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த ஆளில்லா விமானம் மூலம் சீனா, பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இந்திய படை கழுகுப்பார்வையை வைத்துக்கொள்ளும். இந்த ட்ரோன் வருகையால் இந்திிய பாதுகாப்பு துறைக்கு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. நடுத்தர உயரத்தில் பறக்ககூடிய த்ரிஷ்டி 10, நடுத்தர உயரத்தில் நீண்ட தாங்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானமாக இருந்து வருகிறது. கடல் சார்ந்த அச்சுறுத்தலுக்கும், ராணுவ தயார் நிலையை மேம்படுத்துவதற்கு இது உதவிகரமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

More