எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் முன் "அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்" - நடிகை கஸ்தூரி முழக்கம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் முன் "அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்" - நடிகை கஸ்தூரி முழக்கம்

எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் முன் "அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்" - நடிகை கஸ்தூரி முழக்கம்

Nov 17, 2024 08:43 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 17, 2024 08:43 PM IST

  • சென்னையில் பிராமணர்களுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தார். அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில் மதுரை திருநகர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதவிர சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளிலும், திருச்சியில் 3 பிரிவுகளிலும், தேனி மாவட்டம் ஆன்டிப்பட்டி காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடந்து கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவான கஸ்தூரி முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த கஸ்தூரி கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் அவரை கைது செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முன்னதாக, சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட கஸ்தூரி போலீஸ் வேனில் ஏறும்போது அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும் என முழக்கமிட்டார்.

More