தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Actor Sivakumar Fell Down At The Feet Of Pala. Karuppiah

Actor Sivakumar: திடீரென பழ.கருப்பையா காலில் விழுந்த நடிகர் சிவகுமார் - காரணம் என்ன?

Feb 26, 2024 04:50 PM IST Karthikeyan S
Feb 26, 2024 04:50 PM IST
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய 'இப்படித்தான் உருவானேன்' புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் திடீரென மேடையில் இருந்து பேசும்போது குடிநீருக்காக போராடியது, உண்ணாவிரதம் இருந்தது குறித்து பேசி பழ.கருப்பையாவின் காலில் விழுந்து வணங்கி மீண்டும் பேச ஆரம்பித்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சி முடிவில் வயதான ரசிகர் ஒருவர் சிவக்குமாருக்கு பொன்னாடை அணிவிக்க தான் கொண்டு வந்த பொன்னாடையை சிவக்குமாருக்கு அணிவித்து வாழ்த்து தெரிவிக்க முயன்றார். அப்பொழுது அதை தடுத்து பொன்னாடை வாங்கி தூக்கி வீசி விட்டு சென்றார். இதனால் அந்த ரசிகர் மனவேதனை அடைந்தார். பொது இடங்களில் நடிகர் சிவக்குமார் கோபமாக நடந்து கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
More