Actor Ranjith: ‘எனது முழு ஆதரவும் த்ரிஷாவுக்கு உண்டு’..நடிகர் ரஞ்சித் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Actor Ranjith: ‘எனது முழு ஆதரவும் த்ரிஷாவுக்கு உண்டு’..நடிகர் ரஞ்சித் பேட்டி!

Actor Ranjith: ‘எனது முழு ஆதரவும் த்ரிஷாவுக்கு உண்டு’..நடிகர் ரஞ்சித் பேட்டி!

Published Feb 25, 2024 04:36 PM IST Karthikeyan S
Published Feb 25, 2024 04:36 PM IST

  • கோவை காந்திபுரம் பகுதியில் சாய் பிரசாத் எனும் புதிய ஸ்டுடியோ சிறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஞ்சித் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நடிகை த்ரிஷா விவகாரத்தில் யாரும் தனிப்பட்ட முறையில் தெரியாது என்றும் நாகரீகம் என்பது எல்லோருக்கும் அடங்கிய ஒரு விஷயம் எல்லாரும் செய்யும் வேலை போன்று நடிப்பு என்பதும் ஒரு வேலையே தான் என்றும் தெரிவித்தார். மானம் மரியாதை என்பது உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் சரி பூவிற்கும் ஒரு பெண் என்றாலும் மானம் மரியாதை என்பது ஒரு உயர்ந்த பண்பு என இருக்கும் நிலையில் வைரல் கன்டென்ட் என்பதற்காக கூவத்தூர் விவகாரத்தை பேசியது அருவருக்கத் தக்க விஷயம் என்றார். பொதுவாகவே கூத்தாடிகள் என்ற கண்ணோட்டம் மக்களுக்கு இருப்பதாகவும் நிஜ வாழ்க்கையில் நடிக்காத ஆள் இல்லை என்றும் கூறியதுடன் இப்படி மனதை காயப்படுத்தும் படி அவர் பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார். இது போன்ற பேச்சு அரசியல் மீது ஒரு அருவருக்கத்தக்க எண்ணத்தை கொண்டு வருகிறது என்று கூறிய ரஞ்சித், அடுத்த தலைமுறை இளைஞர்கள் படித்துவிட்டு அரசியலுக்கு வர வேண்டும். இந்த மாதிரி அரசியல் என்றாலே சாக்கடை குடித்துவிட்டு இப்படித்தான் இருப்பார்கள் என்ற எண்ணத்தை வளர்கிறது என்றும் இது போன்ற பேச்சுக்களை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் தனது முழு ஆதரவும் திரிஷாவிற்கு உள்ளது என்றும் கூறினார்.

More