Bomb Threat: அதிர்ச்சி சம்பவம்.. தமிழகத்தில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- ஈரோடு மாவட்டம் சேனாதிபதி பாளையத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, முன்னெச்சரிக்கையாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.