தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tirupati Temple: 5 கி.மீ தூரம் நீண்ட வரிசை..திருப்பதியில் கட்டுக் கடங்காத பக்தர்கள் கூட்டம்!

Tirupati Temple: 5 கி.மீ தூரம் நீண்ட வரிசை..திருப்பதியில் கட்டுக் கடங்காத பக்தர்கள் கூட்டம்!

May 19, 2024 03:17 PM IST Karthikeyan S
May 19, 2024 03:17 PM IST
  • உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வார விடுமுறை நாள் என்பதால் இன்று பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து காணப்படுகிறது. இலவச தரிசனத்திற்கு சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். போதிய அளவு பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்தவெளியில் ஆங்காங்கே தங்கும் சூழலும் நிலவுகிறது. இதனிடையே, திருப்பதியில் விட்டு விட்டு மழை பெய்வதால் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
More