Andra Accident: நொடியில் நடந்த விபத்து..லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பஸ் - 6 பேர் பலி!
- ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சில்லக்கல்ரிபேட்டை அருகே ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து சாலையில் எதிரே வந்த லாரி மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ் முழுவதும் தீப்பற்றியது. தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. இந்த விபத்தில் 2 ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மக்களவை தேர்தலுக்காக வாக்களிப்பதற்காக ஐதராபாத் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றுபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வருகை தந்து பேருந்தில் திரும்பி செல்லும் போது இந்த விபத்து நேரிட்டது.