தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ooty Rose Garden: பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்.. ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கும் சுற்றுலா பயணிகள்!

ooty Rose Garden: பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்.. ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கும் சுற்றுலா பயணிகள்!

May 02, 2024 05:43 PM IST Karthikeyan S
May 02, 2024 05:43 PM IST
  • நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வழக்கமான கோடை விடுமுறையையொட்டி சீசன் தொடங்கும் போது பல்லாயிரம் ரோஜா பூக்களுடன் கண்காட்சி நடைபெறும். இங்குள்ள ரோஜா பூங்காவில் வண்ண வண்ண மலர்கள் பூத்துகுலுங்கும். இந்தநிலையில், இந்தாண்டு சீசன் தற்போது தொடங்கியுள்ள நிலையில் 5 அடுக்குகளில் 4 ஆயிரத்து 300 வகைகளை சேர்ந்த 40 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோடை சீசனை முன்னிட்டு அந்த செடிகளில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த காட்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
More