தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Salem: தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் 35 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

Salem: தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் 35 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

May 27, 2024 02:32 PM IST Karthikeyan S
May 27, 2024 02:32 PM IST
  • சேலம் நான்கு ரோடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் கல்லூரியும் இயங்கி வருகிறது. அந்த கல்லூரியில் வெளி மாவட்டங்களில் இருந்து மாணவிகள் தங்கி நர்சிங் பயிற்சி எடுத்து வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து தங்கி படிக்கக்கூடிய மாணவிகளுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே தங்கும் விடுதியும் உள்ளது. இந்த நிலையில் விடுதியில் கொடுக்கப்பட்ட இரவு உணவு சாப்பிட்ட 35க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடல் உபாதைகள் மற்றும் திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர்களை அங்கிருந்து மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More