TN Fisherman: இலங்கை சிறையில் இருந்து 19 தமிழக மீனவர்கள் விடுதலை!-19 tn fishermen released from sri lankan prison - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tn Fisherman: இலங்கை சிறையில் இருந்து 19 தமிழக மீனவர்கள் விடுதலை!

TN Fisherman: இலங்கை சிறையில் இருந்து 19 தமிழக மீனவர்கள் விடுதலை!

Apr 04, 2024 01:29 PM IST Karthikeyan S
Apr 04, 2024 01:29 PM IST
  • எல்லை தாண்டி மீன்பிடித்தாக மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்களை கடந்த மார்ச் 6 ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 19 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்திய – இலங்கை தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து 19 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் கொழும்புவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தடைந்தனர். பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தனி வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர்.
More