தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Python: முட்புதரில் பதுங்கி இருந்த மெகா சைஸ் மலைப்பாம்பு

Python: முட்புதரில் பதுங்கி இருந்த மெகா சைஸ் மலைப்பாம்பு

May 08, 2024 05:50 PM IST Karthikeyan S
May 08, 2024 05:50 PM IST
  • உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் அருகே உள்ள இஸ்மாயில்பூர் கிராமத்தை ஒட்டியுள்ள வயல்பகுதி ஒன்றில் விவசாயிகள் தங்கள் வயல்களில் வேலை செய்துக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த முட்புதற் ஒன்றில் 13 அடி நீள ராட்சத மலைப்பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வன ஊழியர்கள், சுமார் 13 அடி நீளம் கொண்ட அந்த ராட்சத மலைப்பாம்பை கடுமையாக போராடி பிடித்தனர். மீட்கப்பட்ட மலைப்பாம்பை வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர். இந்த வீடியோ எக்ஸ் வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.
More