Rameswaram: திடீரென உள்வாங்கிய கடல்.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு!
- ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கியதால் கரையோர மீனவர்கள் அவதியடைந்தனர். கடல் உள்வாங்கியதால் கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டியது. இதனால் அப்பகுதியில் அரிய வகை பவளப் பாறைகள், கடல் பாசி வகைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள், சங்கு முள் உள்ளிட்டவை கடலில் இருந்து வெளியில் தெரிந்தன. இதேபோல், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை பகுதியிலும் கடல் நீர் உள் வாங்கியதால் பக்தர்கள் புனித நீராடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.