தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Writer Manushyaputra's Facebook Post About Tony & Guy Barbershop In Madurai

மதுரைக்கு வந்த சோதனைய பாத்தீங்களா? tony & guy நிறுவனத்தை விளாசும் மனுஷ்!

Kathiravan V HT Tamil
Feb 28, 2023 05:13 PM IST

"மதுரைக்கு வந்தியா..குமார்.மெஸ்ல சாப்ட்டுட்டு ஜிகர் தண்டா குடிச்சியா ..போய்ட்டே இரு...டோனி அண்ட் கை எல்லாம் இங்க வந்து ட்ரை பணணாதே..அதெல்லாம் உங்க ஊர்ல வேற...எங்க ஊர்ல வேற.."

மதுரை tony & guy நிறுவனத்தில் நகம் வெட்டி எதிர்ப்பை பதிவு செய்யும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்
மதுரை tony & guy நிறுவனத்தில் நகம் வெட்டி எதிர்ப்பை பதிவு செய்யும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்

ட்ரெண்டிங் செய்திகள்

எழுத்தாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட மனுஷ்யபுத்திரன் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் திமுக சார்பில் பேசி வருவதன் மூலம் மக்களுக்கு நன்கு பரிட்சியமானவர்.

அவர் எழுதும் கவிதைகள் மற்றும் கருத்து பதிவுகளுக்காக அவரது முகநூல் பக்கத்தில் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், மோசமான அனுபவங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரும். இன்று மதுரையில் விஷால் மாலில் அமைந்துள்ள tony&guy பார்லரில் நடந்தது. ஒரு மாதமாக தொடர் அலைச்சலால் சென்னையில் நான் வழக்கமாக செல்லும் க்ரீன் ட்ரெண்டிற்கு செல்ல முடியவில்லை. தலைமுடி கோரையா வளர்ந்துகிடந்தது. நகம் வேறு ட்ராகுலா நிலையை எட்டியிருந்தது.

இரண்டு நாட்கள் நெல்லையில் பெரும் கொண்டாட்ட மனநிலையில் இருந்துவிட்டு மதுரையில் நேற்றிரவு வந்து இறங்கியதிலிருந்தே சிறு சிறு சங்கடங்கள். அப்படித்தானே இருக்கும்.. மதியம் மிகவும் மன அழுத்தமாக இருந்தது. வெளியே போய் அம்மா மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது போய் முடிதிருத்திக்கொள்ளலாமா என்றொரு விபரீத எண்ணம் தோன்றியது. Tony & guy க்குள் நுழைந்தேன்.

”நகவெட்டி வாங்கி வந்து நகம் வெட்டினேன்”

முடிதிருத்திவிட்டு வளர்ந்துகிடந்த நகத்தை அகற்ற சொன்னால் ' அதற்கான ஆள் லீவு சார் ' என்கிறார்கள் கூலாக. எனக்கு ப்ரெஷர் தலைக்கு ஏறிவிட்டது. என் உதவியாளரை ஒரு நகவெட்டி வாங்கிவரச்சொல்லி அந்தக் கடைக்குள்ளேயே என் உதவியாளரைக்கொண்டே நகம்வெட்டச் சொன்னேன். அது ஒரு எதிர்ப்பு. 'இது உங்கள் நிறுவனத்திற்குத்தான் அவமானம்' என்றேன். அதுமட்டுமல்ல, ஹேர்வாஷ் பண்ணப்போனால் அதற்கான மேடையில் வீல் சேர் ஏற இடமில்லை.

”சென்னையில் சிற்பமாய் செதுக்குவார்கள்”

எப்படியோ சமாளித்து ஏறினால் ""மீசையில் டச் அப் செய்திருந்த ' கலரிங்க்' கை நீங்களேதான் கழுவிக்கொள்ளவேண்டும் " என்றார்கள். எனக்கு எனன நடக்கிறது என்றே தெரியவில்லை. டச் அப் செய்த இடங்களிலும் அரைகுறை. சென்னையில் நான்போகும் பார்லர்களில் எல்லாம் தங்கமாய் தாங்குவார்கள். என்னை சிற்பமாய் செதுக்குவார்கள். ஓவியமாய் தீட்டுவார்கள். அதே ப்ராண்ட், அதே காசு. ஆனால் மதுரையில் அந்த சர்வீஸின் சிறு பகுதிகூட இல்லை. இந்த நாள் முழுமையாக இவ்வாறாக பாழானது.

குமார் மெஸ்ல சாப்புட்டு போய்ட்டே இருக்கணும்…1

அவர்கள் செர்வீஸ் செய்யும் இலட்சணத்தை கடுமையாக அவர்களிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே சாயங்காலம்.' காவிரி நீரோவியம்' கூட்டம் இருப்பது நினைவுக்கு வந்து கிளம்பிவிட்டேன். வரும் வழியில் இது குறித்து மதுரையைச் சேர்ந்த சிநேகிதி ஒருத்திக்கு போன் செய்து புலம்பியபோது அவள் சொன்னது இது:

"மதுரைக்கு வந்தியா..குமார்.மெஸ்ல சாப்ட்டுட்டு ஜிகர் தண்டா குடிச்சியா ..போய்ட்டே இரு...டோனி அண்ட் கை எல்லாம் இங்க வந்து ட்ரை பணணாதே..அதெல்லாம் உங்க ஊர்ல வேற...எங்க ஊர்ல வேற.." என பதிவிட்டுள்ளார். மனுஷ்யபுத்திரனின் இந்த முகநூல் பதிவில் ஏராளமானோர் பதில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்