Apply ITI : வாவ்! ஐ.டி.ஐ படித்தால் இத்தனை நன்மைகள்? விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – ரெடியாகுங்க மாணவர்களே
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Apply Iti : வாவ்! ஐ.டி.ஐ படித்தால் இத்தனை நன்மைகள்? விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – ரெடியாகுங்க மாணவர்களே

Apply ITI : வாவ்! ஐ.டி.ஐ படித்தால் இத்தனை நன்மைகள்? விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – ரெடியாகுங்க மாணவர்களே

Priyadarshini R HT Tamil
Jun 09, 2023 11:35 AM IST

ITI Application : பத்தாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 12ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐடிஐயில் சேர விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க பேட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஐ.டி.ஐ.க்கள், பேட்டையில் உள்ள மாவட்ட திறன் மேம் பாட்டு பயிற்சி மையம், மாவட்ட வேலைவாய்ப்பு ஆகியங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐ.டி.ஐ. சேர்க்கை உதவி மையங்களை அணுகியும் விண்ணப்பிக்கலாம்.

இதன்மூலம் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு ஐடிஐயிலும் சேர முடியும். அதற்கான விவரங்கள் இணையதள விளக்க கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி மாதம் ரூ.750 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

தற்போதைய விதிகளின்படி பயிற்சியின்போது மடிக்கணினி, மிதிவண்டி, ஆண்டுக்கு இரண்டு சீருடைகள், ஒரு ஜோடி காலணி, வரைபட கருவிகள் விலையில்லாமல் வழங்க வாய்ப்புள்ளது.

மாணவர்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்து செல்ல இலவச பயண அட்டை, சலுகைக் கட்டணத்தில் ரயில் பயண அட்டை வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 12ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம்.

இதேபோல் 8ம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 10ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம்.

அரசு ஐடிஐயில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுப் பணி, முன்னணி அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்புள்ளது என மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.