Job Opportunities : பாதிக்கப்பட்ட பெண்களுக்கான புதிய உதவி மையத்தில் பணிகள் - விவரங்கள் உள்ளே...
Job Opportunities : பெண்களுக்கான உதவி மையத்தில் பணிபுரிய தகுதியுடையவர்கள் மே.5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது -
வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உதவி மையம் அமைக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பல்வேறு பணியி டங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தகவல் தொழில்நுட்பப் பணியாளர் பணியிடம் - 1. இந்தப் பணியிடத்துக்கு இளங்கலை பட்டப்படிப்பு (பிடெக், பிஎஸ்சி), டிப்ளமோ இன் கம்யூட்டர்ஸ் மற்றும் டேட்டா மேனேஜ்மென்ட்
படிப்பை முடித்தவராகவும், செயல்முறை ஆவணங்கள் தயாரிப்பு ( புராசஸ் டாக்குமென்டேஷன்) பிரிவில் மாநில, மாவட்ட, தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.18,000 வழங்கப்படும்.
வழக்குப் பணியாளர்கள் பணியிடங்கள் - 4. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமூகப் பணியில் இளங்கலை பட்டம் ( பிஏசோஷியல் ஒர்க்) பெற்றிருக்கவேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் ஓராண்டு முன் அனு பவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப் பணிகளிலோ குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர் 35 வயதுக்கு உட்பட்டவராகவும், உள்ளூரைச் சேர்ந்த, வாகனம் ஓட்டத் தெரிந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும்.
பாதுகாப்பாளர் பணியிடங்கள் - 2. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.10,000 வழங்கப்படும்.
பன்முக உதவியாளர் பணி யிடங்கள் - 2. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது அலுவலகத்தில் பணியாற்றிய அனுப வம் உடையவராகவும், சமையல் செய்யத் தெரிந்த, உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.6,400 வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் https://chennai.nic.in எனும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, உரிய சான்றிதழ்களுடன் மே 5ம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை, ராஜாஜி சாலை, கலெக்டர் அலுவலக வளாகம், 8வது தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது chndswosouth@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியிலோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்